உஷார்!! வீட்டில் வைத்திருந்த ரூ.5.50 லட்சம் திருட்டு... பணிப் பெண் காட்டிய கைவரிசை!

 
பணம் கொள்ளை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேலை செய்த வீட்டில் ரூ.5.50 லட்சம் ரொக்கத்தை திருடியதாக, பணிப் பெண்ணை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள பெருமாள்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி சக்கம்மாள்(72). கணவரை இழந்த இவரது மகனும் மகளும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனா். 

லஞ்சம் பணம் ஊழல்

சக்கம்மாள் தனது, அவரது சகோதரி லிங்கமாளுடன் வசித்து வருகிறாா். இவரது மகன் வீடு கட்டுவதற்காக கொடுத்து வைத்திருந்த ரூ. 5.50 லட்சத்தை காணவில்லை என்று கூறப்படுகிறது. 

இதை அவரது வீட்டு பணிப்பெண்ணான தூத்துக்குடி பிரையண்ட் 2வது தெருவை சோ்ந்தச் பரணிதரன் மனைவி ஷீலா(55) திருடியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. 

இது குறித்து சக்கம்மாள் அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புதூா் போலீசார் வழக்குப்பதிந்து ஷீலாவைக் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.1.20 லட்சம் ரொக்கத்தை மீட்டனா். மீதி பணத்துடன் தலைமறைவான அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனா்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web