துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை... வங்கக்கடலில் உருவானது தாழ்வு மண்டலம்: புதுக்கோட்டை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை!

 
புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுவடைந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரவுள்ளதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புப்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகக் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.

மழை

தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி,  காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய தமிழகத்தின் முக்கிய 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நாளை (ஜன. 9) முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ வேகம் வரை வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மழை கனமழை

ஜனவரி 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அறுவடைக்குத் தயாராக இருக்கும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. மழை எச்சரிக்கை இருப்பதால், பொதுமக்கள் குடை அல்லது மழைக்கோட்டுடன் சென்று பொருட்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த வாரம் நிலவிய கடும் குளிரும் பனியும் தற்போது குறைந்து, காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!