சீக்கிரமா வீட்டுக்கு போங்க... 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு... !

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ஈரோடு, விருதுநகர், குமரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதை போல, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!