மாரடைப்பில் உயிருக்கு போராடிய கணவர்… உதவி கேட்டு கதறிய மனைவி.... வைரல் வீடியோ!

 
பெங்களூரு
 

பெங்களூரு பனசங்கரி பகுதியை சேர்ந்த வெங்கடரமணன் (34) தனியார் நிறுவன ஊழியர். அதிகாலை வீட்டில் இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மனைவி ரூபாவுடன் பைக்கில் மருத்துவமனை சென்றார். அங்கு டாக்டர்கள் இல்லாததால் மற்றொரு மருத்துவமனைக்கு சென்றனர். இ.சி.ஜி. எடுத்தபோது லேசான மாரடைப்பு என தெரிய வந்தது. எந்த சிகிச்சையும் அளிக்காமல் ஜெயதேவா மருத்துவமனைக்கு செல்ல சொல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தம்பதி பைக்கிலேயே புறப்பட்டனர்.

கதிரேனஹள்ளி பாலம் அருகே சென்றபோது மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் நின்ற ஸ்கூட்டர் மீது மோதியது. சுமார் 100 மீட்டர் தூரம் பைக்குடன் இழுத்துச் செல்லப்பட்டார். ரூபா கீழே விழுந்து காயமடைந்தார். உயிருக்கு போராடிய கணவரை பார்த்து ரூபா பதறினார். வழியாக வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி உதவி கேட்டார். ஆனால் நீண்ட நேரம் யாரும் நிற்கவில்லை.

பின்னர் வெங்கடரமணனின் தங்கை வந்து முதலுதவி செய்தார். அதன் பிறகே ஒரு கார் டிரைவர் உதவ முன்வந்தார். அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் வரும் வழியிலேயே வெங்கடரமணன் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். நடுரோட்டில் உதவி கேட்டு நின்றும் யாரும் உதவாத காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மனிதாபிமானம் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!