வைரல் வீடியோ... பிரசித்தி பெற்ற கோவிலில் மனைவியின் காலில் விழுந்து வணங்கும் கணவன்… இதெல்லாம் ரொம்ப தப்பு... சராமாரி திட்டு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரிந்தாவனில் பிரசித்தி பெற்ற பிரேம் மந்திரில் சமீபத்தில் ரீல்ஸ்க்காக எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், ஒரு தம்பதியர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக ஒரு கணவர் தன் மனைவியின் கால்களை தொட்டு கும்பிடுகிறார்.
#मथुरा- वृंदावन के प्रेम मंदिर में रील्स बना बना रहे जोड़े को बुजुर्ग महिला ने लताड़ा। प्रेम मंदिर में रील्स बना रहा पति पत्नी के पैर छू रहा था, मौके पर देख रही बुजुर्ग महिला ने श्रद्धालु कपल को औरत और मर्द के बीच रहने की बताई मर्यादाएं। महिला श्रद्धालु ने युवक को दी नसीहत कि… pic.twitter.com/6FxdV9aDwS
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) June 15, 2025
இதை பார்த்த மூதாட்டி அவர்களிடம் இது போன்ற செயற்பாடுகள் பவித்ரமான கோவில் வளாகத்தில் நியாயமல்ல என சராமாரியாக திட்ட தொடங்குகிறார். மூத்த பெண்மணி தொடர்ந்து ஒரு மகன் தனது தாயின் கால்களை மட்டும் தான் தொட்டு வணங்க வேண்டும், மனைவியின் கால்களை தொட்டல் பாரம்பரியமாக ஏற்கப்படுவதில்லை எனக் கூறினார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பாரம்பரியச் செயல் முறைகள் மற்றும் சமய தளங்களில் சமூக வலைதளப் பயன்பாடு குறித்த விவாதங்களை கிளப்பி இருக்கிறது. சிலர் மூதாட்டியின் கூற்றை ஆதரிக்க, சிலர் அதனை விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு, ஒரு கோயில் வளாகத்தில் நிகழ்ந்த குறும்படப் படமாக்கல் நிகழ்வு, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!