கோவிலுக்கு பைக்கில் சென்ற தம்பதி மீது கார் மோதி கணவன் பலி... நிர்மலா சீதாராமன் உறவினர் கைது!

திண்டிவனம் அடுத்த ஓங்கூர் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நாராயணசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மனைவி மீனா அச்சிரப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தினர். அத்துடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் ஓங்கூர் சுங்கச்சாவடியை கடந்த வாகனங்களை ஆய்வு செய்ததில் ஒரு வாகனத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த நேரத்தை கண்காணித்ததில் மேற்குவங்க மாநில பதிவெண் கொண்ட சொகுசு காரை அடையாளம் கண்டனர். இதில் விபத்து ஏற்படுத்தியது சென்னை ஏ.ஜி.எஸ். நகரில் வசித்து வரும் 32 வயது அரவிந்த் என்ற தொழிலதிபர் என்பது தெரியவந்தது.அவரை கைது செய்து விசாரித்ததில், அவர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உறவினர் என்றும் அரவிந்த் அம்மாவின் சித்தி மகள் தான் நிர்மலா சீதாராமன் எனக் கூறியதாக கூறப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!