வரதட்சணை பொருட்களை திருப்பிக் கேட்டதால் மனைவியை கொலை செய்த கணவன்!

 
மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் 35 வயது பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்பனா சோனி என்பவர், திருமணத்தின் போது பெற்றோரிடம் இருந்து கொண்டு வந்த வரதட்சணை பொருட்களை திருப்பிக் கேட்டதாலேயே கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் அவரது கணவர் மகேஷ் சோனி மற்றும் நாத்தனார் தீபாலி சோனி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்புலன்ஸ்

2015-ம் ஆண்டு மகேஷ் சோனியை திருமணம் செய்த கல்பனா, விரா பகுதியில் கணவர் மற்றும் மாமியாருடன் வசித்து வந்தார். வரதட்சணை தொடர்பாக தொடர்ந்து மன, உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 27-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறிய கல்பனா, தன்னுடைய நகை மற்றும் சொத்துகளை திருப்பி தருமாறு கேட்டபோது, கோபமடைந்த மகேஷ் மற்றும் தீபாலி அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ்

கழிவறையில் தவறி விழுந்ததாக கூறி நாடகம் ஆடிய நிலையில், மருத்துவர்கள் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து கொலை வெளிச்சத்துக்கு வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், ஜனவரி 2 வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளனர். இந்த தம்பதிக்கு 7 வயது மகள் உள்ள நிலையில், தற்போது அந்தச் சிறுமி கல்பனாவின் தாயார் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!