மனைவி, மாமியாரை கத்தியால் வெட்டிக் கொலை செய்த கணவர்… அதிர்ச்சி !

 
ஆந்திரா ஆந்திரா

 

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் சுப்பாராவ்பேட்டையைச் சேர்ந்த சீதாராமராஜு நிதி வசூல் தொழில் செய்து வந்தவர். அதே பகுதியைச் சேர்ந்த லதா என்ற பெண்ணை காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3  குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சீதாராமராஜு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 ஆம்புலன்ஸ்

அவர் சிறையில் இருந்த காலத்தில், குடும்பத்தின் நிதி தொடர்பான விஷயங்களை லதா கவனித்து வந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சீதாராமராஜு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் வந்து மனைவியை தாக்கியதால் காயமடைந்த லதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தியிருந்தாலும், தகராறு அதிகரித்து ஒரு ஆண்டுக்கு முன்பு அவர்கள் பிரிந்து வாழத் தொடங்கினர். குழந்தைகள் தந்தையிடமே இருந்தனர்.

போலீஸ்

இதற்கிடையில் சீதாராமராஜு, வீட்டுக்கு எதிரில் வசித்த குமாரி என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாய் வீட்டுக்கு வந்திருந்த லதாவை பார்க்க சென்ற சீதாராமராஜு, கடும் கோபத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!