சலசலப்பு... சம்மனுக்கு நேரில் ஆஜராகாத சீமான்!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் சீமான் "வெடிகுண்டு வீசுவதாக" பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியிருந்தார். இதனையடுத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட சீமான் ஜனவரி 28.ம் தேதி பவானி சாலையில் நெரிக்கல் மேடு என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தன்னிடம் பிரபாகரன் வழங்கிய வெடிகுண்டு இருப்பதாகவும் அதனை வீசினால், உங்களை புதைக்கும் இடத்தில் புல் பூண்டு கூட முளைக்காது என பேசி இருந்தார். இனப்பற்று வேண்டாம், இனவெறி கொள்ளுங்கள் என மக்களை தூண்டும் வகையில் பேசியிருந்தார்.
இந்த பேச்சு, வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், இனம் மொழி அடிப்படையில் பிரிவினையை தூண்டும் வகையில் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து சீமான் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதன் பேரில் ஜனவரி 30. ம் தேதி கருங்கல்பாளையம் போலீசார், சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பொது அமைதிக்கு எதிராக செயல்பட்டு, குற்றம் செய்யத் தூண்டும் வகையில் பேசுதல், மதம் இனம் மொழி அடிப்படையில் பிரிவினை வாதத்துடன் தவறான தகவல்களை உள்நோக்கத்துடன் பரப்புதல், தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தி வன்முறையை தூண்டுதல் என BNS-351(c), BNS-196, BNS-(1)(b)(1)(c) பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்காக சீமான், ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் 20ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என 17ம் தேதி வீட்டிற்கு நேரில் சென்று போலீசார் சம்மன் வழங்கி இருந்தனர். இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு சீமான் ஆஜராக வில்லை. அவருக்கு பதிலாக நாதக வழக்கறிஞர் நன்மாறன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்தது. அவர்கள் இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க கோரி காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் இவற்றை ஒருங்கிணைக்க கோரி டிஜிபி.யிடம் சீமான் சார்பில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது எனவும் அதன் மீது டிஜிபி முடிவு எடுக்கும் வரை ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் காவல் ஆய்வாளர் விஜயனிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!