சேலம், கோவை, திருச்சியில் வானில் பறக்கும் ஹைட்ரஜன் பலூன்… வானிலை கணிப்பில் புதிய முயற்சி
வானிலை முன்னறிவிப்பு, புயல் எச்சரிக்கை, விவசாய ஆலோசனை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய பங்காற்றி வருகிறது. மழை, காலநிலை மாற்றம், வளிமண்டல நிலை, விமான போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான துல்லிய தகவல்களை வழங்குகிறது. இதன் ஒரு பகுதியாக, சேலம், கோவை, திருச்சி மாவட்டங்களில் ஹைட்ரஜன் பலூன் பறக்க விடும் அலுவலகங்களை அமைக்க இந்திய வானிலை நிலையம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இடம் தேர்வு முடிந்ததும் இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டு, அங்கு அலுவலகம் அமைக்கப்படும். அந்த அலுவலகத்தில் இருந்து ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் வானில் பறக்க விடப்படும். இதில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு, வளிமண்டல தகவல்கள் சேகரிக்கப்படும். இந்த பலூன் சுமார் 30 கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது.
பலூன் மூலம் வெப்பநிலை, காற்றின் வேகம், திசை, அழுத்தம், ஈரப்பதம் போன்ற முக்கிய தகவல்கள் பெறப்படும். இது புயல் முன்னறிவிப்பு மற்றும் வளிமண்டல ஆய்வுக்கு பெரிதும் உதவும். தினமும் காலை மற்றும் மாலை என இரு முறை பலூன் பறக்க விடப்படும். ஹீலியத்தை விட குறைந்த செலவான ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுவதால், அதிக உயரம் வரை நீண்ட நேரம் நிலைத்திருக்கும். முதல்கட்டமாக சேலம் மாவட்டத்தில் அலுவலகம் அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
