"விஜய்க்கு நான் பெரிய ரசிகை... கடைசி படம் என்பது வருத்தமே" - நடிகை குஷ்பு உருக்கம்!
நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்திற்காகத் திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரைப் பற்றிய தனது நினைவுகளையும் விருப்பத்தையும் குஷ்பு பகிர்ந்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த குஷ்பு, "விஜய்யை நான் ஒரு சக நடிகர் என்று சொல்ல மாட்டேன். அவர் எனக்கு தம்பி போன்றவர். நான் அவரை தம்பி என்று தான் கூப்பிடுவேன், அவரும் என்னை 'அக்கா' என்று தான் அழைப்பார். அந்த அளவிற்கு எங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருக்கிறது".

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் அவரது கடைசிப் படம் என்ற அறிவிப்பு குறித்துக் கூறுகையில், "நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை. அவரது ஆக்ஷன் மற்றும் நடனம் என்றால் எனக்குக் கொள்ளை இஷ்டம். திரையில் அவரது துடிப்பான நடிப்பைப் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்."

"விஜய் அரசியல் கட்சி தொடங்கி விட்டதால் சினிமாவில் இருந்து விலகுவதாக அவர் முடிவெடுத்திருப்பது எனக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. குறிப்பாக 'ஜனநாயகன்' தான் அவரது கடைசிப் படம் என்பது ஒரு ரசிகையாக எனக்கு ஏமாற்றமே. இருப்பினும், விஜய்யின் புதிய அரசியல் பயணத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த குஷ்பு, அவர் தேர்ந்தெடுத்துள்ள பாதையில் வெற்றி பெற வாழ்த்துவதாகக் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
