கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு நான் தான் உதாரணம்... நடிகர் சூரி பெருமிதம்!

 
சூரி விஜய்
 நடிகர் சூரியின் ‘மாமன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சூரி கோவை அவினாசி சாலை சிட்ரா பகுதியிலுள்ள திரையரங்குக்கு ரசிகர்களை சந்தித்தார்.  இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி, “மாமன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தவிர்க்க முடியாத உறவான தாய் மாமன் உறவை மையப்படுத்தி என்ன நினைத்து திரைப்படத்தை எடுத்தோமோ , அனைவருக்கும் connect ஆகும் என்ற நினைத்த மாதிரி நடந்துள்ளது, முதல் பாதி சிரிப்பு, சந்தோஷம், அடுத்த  பாதி அழுகை வரும் வகையில் உணர்வுகளை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் தாய்மார்களுக்கு மட்டுமின்றி இளைஞர்களுக்கும் இந்த திரைப்படம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி.

சூரி

இந்த படத்தை பார்த்த பிறகு மனஸ்தாபம் கொண்ட உறவுகளை சந்திக்க தோணும், மீண்டும் உறவுகளை இணைக்க வேண்டும் எனத் தோன்றும். செல்போன்கள் தனிமையான உலகத்தை உருவாக்கும் ஆபத்தை கொண்டது, தேவையானவற்றுக்கு மட்டும் செல்போன் பயன்படுத்தி நண்பர்கள் உறவினர்களுடன் நேரத்தை கழிக்க வேண்டும். குடும்ப படங்கள் மிகவும் குறைந்தஅளவு தான் வெளிவருகிறது. குடும்பத்திற்காக கடவுளிடம் சென்று வேண்டலாம், திரைப்படத்திற்காக செய்யும்போது குடும்பத்துக்கு மன வேதனை ஏற்படுத்தும் என்பதால் மண் சோறு சாப்பிட வேண்டாம். ரசிகர்கள் இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன். 

சூரி
எனக்கு பொருத்தமான, சொல்ல வேண்டிய கதை என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எனக்கு வெற்றியை தருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க நிறைய ஆசை உள்ளது. கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு நான் தான் உதாரணம். ஓடிடி இருந்தாலும் தியேட்டருக்கு வரும் மக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். எங்களது உணவகம் மக்கள் ஆதரவுடன் சிறப்பாக பல கிளைகள் திறக்கும் அளவுக்கு நடந்து வருகிறது. தவெக தலைவர் விஜய் அண்ணன் சரியாக போய் கொண்டிருக்கிறார். திரைப்படங்கள் பணி காரணமாக தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க முடியாது” எனக் கூறியுள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது