“ஹோலி கொண்டாட அனுமதிக்கலை...” கல்லூரியில் ஆசிரியர்களை பூட்டி சிறை வைத்த மாணவர்கள்!

 
ஹோலி

ஹோலி கொண்டாட அனுமதிக்காததால், ஆசிரியர்களை அறைக்குள் வைத்து பூட்டி விட்டு, அந்த அறையின் மின்சாரத்தையும் துண்டித்து சிறை வைத்து அராஜகம் செய்துள்ளனர் கல்லூரி மாணவர்கள்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் அமைந்திருக்கும் ஒரு கல்லூரியில், மாணவர்கள் ஹோலி கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று, அனுமதி மறுத்த ஆசிரியர்களை ஓர் அறைக்குள் வைத்து பூட்டி சிறைப்பிடித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறை
இந்தூரில் 133 ஆண்டுகள் பழமையான ஹோல்கர் அரசு அறிவியல் கல்லூரியில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வரும் மார்ச் 7 அன்று கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான நுழைவுக் கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிகிறது.  

இதனைத் தொடர்ந்து, ஹோலி நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததுடன் அதனை மொத்தமாக ரத்து செய்ததினால் ஆத்திரத்தில் மாணவர்கள் ஓர் அறையில் கூடியிருந்த ஆசிரியர்கள் அனைவரையும் உள்ளே வைத்து வெளியே தாழிட்டு பூட்டு போட்டு விட்டனர்.அந்த அறையினுள் மின்சாரத்தையும் துண்டித்த அவர்கள் ஆசிரியர்களை நோக்கி கோஷங்களை எழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறை

இந்நிலையில், சுமார் அரை மணிநேரம் அந்த அறையினுள் பூட்டப்பட்டிருந்த கல்லூரி பணியாளர்களில் ஒருவர் அந்த அறையின் ஜன்னல் வழியாக வெளியே வந்து அந்த பூட்டை திறந்து ஆசிரியர்களை விடுவித்துள்ளார்.

இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் அக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் அனாமிகா ஜெயின் புகார் அளித்துள்ளார்.  தற்போது வரை இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web