மூத்த மகனை கட்சி மற்றும் குடும்பத்திலிருந்து நீக்குகிறேன்... லாலு பிரசாத் யாதவ் அதிரடி !
பீஹார் முன்னாள் அமைச்சர் சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யாவை, தேஜ் பிரதாபுக்கு 2018ல் திருமணம் செய்து வைத்தனர்.ஆனால், இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில், சமூக வலைதளமான பேஸ்புக்கில் தேஜ் பிரதாப் யாதவ் நேற்று வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த புகைப்படத்தில் ஒரு பெண்ணுடன், தான் இருக்கும் படத்தை பதிவிட்ட தேஜ் பிரதாப், 'என்னுடன் படத்தில் இருக்கும் இவர் அனுஷ்கா யாதவ். இருவரும், 12 ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வருகிறோம்; ஆழமாக நேசிக்கிறோம். நீண்ட நாளாக இந்த விஷயத்தை சொல்ல விரும்பினேன்; வார்த்தைகள் கிடைக்கவில்லை. தற்போது, இந்த படத்தின் மூலமாக என் இதயத்தை உங்களுக்கு திறந்து காட்டுகிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.

அனுஷ்காவுடன் 12 ஆண்டுகளாக தொடர்பில் இருந்தால், 2018ல் எதற்காக முன்னாள் அமைச்சரின் மகளை திருமணம் செய்தார்? அது கட்டாய திருமணமா என, பல்வேறு தரப்பினரும் கேள்விகள் எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், தன் பேஸ்புக் கணக்கை மர்ம நபர்கள் 'ஹேக்' செய்து விட்டதாக, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் தேஜ் பிரதாப் கூறினார். அது நம்பும்படியாக இல்லை.ஏனெனில், விமர்சனங்கள் எழுந்ததும், அனுஷ்காவுடன் தேஜ் பிரதாப் இருந்த 'பேஸ்புக்' பதிவு நீக்கப்பட்டது. இந்த விவகாரம், லாலு பிரசாத்துக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், கட்சியில் இருந்து தேஜ் பிரதாபை ஆறு ஆண்டுகள் நீக்குவதாகவும், குடும்பத்தில் இருந்து தள்ளி வைப்பதாகவும் அறிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் தேஜ் பிரதாபின் செயல்பாடுகளும், பொறுப்பற்ற நடத்தையும், எங்கள் குடும்பத்தின் மதிப்பு, மரியாதைக்கு ஏற்றதாக இல்லை. கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் அவரை நீக்குகிறேன். இனிமேல் அவருக்கு கட்சியிலும், குடும்பத்திலும் எந்த பங்கும் இருக்காது.

தனிப்பட்ட வாழ்க்கையில், தார்மீக மதிப்புகளை புறக்கணிப்பது என்பது சமூக நீதிக்கான நம் போராட்டத்தை பலவீனமாக்குகிறது.தேஜ் பிரதாப், தன் வாழ்க்கையைப் பற்றி எந்த முடிவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். அவருடன் இருக்க விரும்புவோரும், அது பற்றி முடிவு செய்யலாம். ஆனால், பொது வாழ்க்கையில் நான் எப்போதும் மரியாதையை கடைப்பிடிக்கிறேன். என் கீழ்ப்படிதலில் உள்ள குடும்ப உறுப்பினர்களும் அதை பின்பற்றி வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
