“பாமக தலைவர் நான்தான்... அன்புமணி கிடையாது... கூட்டணி குறித்து ராமதாஸ் முக்கிய அறிவிப்பு!

 
 ராமதாஸ், அன்புமணி

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமகவுக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

சமீபகாலமாக ஊடகங்களில் அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராகச் சித்தரிக்கப்படுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த ராமதாஸ்,  டெல்லி நீதிமன்றத் தீர்ப்பின்படி, பாமகவின் சின்னம், கொடி மற்றும் பெயரை அன்புமணி உபயோகிக்கக் கூடாது. மீறினால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும். பாமகவின் தலைவர் நான்தான், அன்புமணி அல்ல. இனி ஊடகங்கள் அவரை கட்சியின் தலைவர் எனக் குறிப்பிட வேண்டாம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

 ராமதாஸ்

2026 தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடு குறித்துப் பேசுகையில்: பாமக அமைக்கும் கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும். இதுதான் சிறந்த கூட்டணி, நாணயமான கூட்டணி" என்று மக்கள் பாராட்டும் வகையில் ஒரு கூட்டணியை அமைக்கத் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் கூட்டணி குறித்த நல்ல முடிவு மிக விரைவில் முறைப்படி அறிவிக்கப்படும் என்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!