டார்ச்சர் தாங்க முடியல... கள்ளக்காதலனுடன் கணவனை இரும்புக் கம்பியால் அடித்தே கொலை செய்த மனைவி!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மீர்பேட் சாந்தி நகர் பகுதியை சேர்ந்த நாராயணா (35), மனைவி பந்தித்தா (27) மற்றும் 6 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். நாராயணா பிளம்பிங் வேலை செய்து வந்த நிலையில், பந்தித்தா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இதற்கிடையில், பந்தித்தாவுக்கு அக்கம் பக்கத்தில் வசிக்கும் வித்யாசாகர் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது.

இந்த உறவை அறிந்த நாராயணா, குழந்தையின் எதிர்காலத்தை கருதி சேர்ந்து வாழ வேண்டும் என மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பந்தித்தா, காதலன் வித்யாசாகருடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, ஜனவரி 1-ம் தேதி இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாராயணாவை இருவரும் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தனர்.

பின்னர், திருடர்கள் கொலை செய்ததாக போலீசுக்கு தகவல் அளித்து நாடகம் ஆடினர். ஆனால் விசாரணையில் பந்தித்தாவின் பதில்கள் சந்தேகம் எழுப்பியது. கடுமையான விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பந்தித்தா மற்றும் வித்யாசாகரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
