மறக்கவே முடியலை.... திருமணம் செய்துக் கொண்ட இளம்பெண்கள்... வைரல் வீடியோ!
பார்த்த மாத்திரத்தில் மனசுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க, மறக்கவே முடியாது என்று முடிவெடுத்து இரண்டு பெண்கள் திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட 2 பெண்களும் அவரவர் கணவன்மார்களால் கைவிடப்பட்டவர்களாக கூறப்படுகிறது. இந்த இரு பெண்களும் நட்பாக பழகி வந்த நிலையில் பின்னர் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.
இவர்கள் முதன்முதலாக நீதிமன்ற வளாகத்தில் தான் சந்தித்து கொண்டனராம். தங்களுடைய கணவன்மார்களால் ஏமாற்றப்பட்ட விரக்தியில் இருந்த இருவரும் பழகி வந்த நிலையில் பின்னர் காதலிக்க தொடங்கி விட்டனர். இதனை முறைப்படி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

இதில் ஒரு பெண் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றும் நிலையில் மற்றொருவர் ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
