அமெரிக்க போக விசா கிடைக்கலை... இளம் பெண் மருத்துவர் தற்கொலை!

 
america

அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க காத்திருந்த இளம் பெண் மருத்துவர், விசா நிராகரிக்கப்பட்ட நிலையில்  மன அழுத்தத்தில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோகிணி (38). ஐதராபாத்தின் பத்மாராவ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ரோகிணி, ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்திருந்தார். அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் மருத்துவப் பயிற்சி பெறுவதற்காக ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து, காத்திருந்தார்.

தற்கொலை

விசா தொடர்பான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த ரோகிணி,  மருத்துவ மேற்படிப்பு என்பதால் தனக்கு எப்படியும் விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல மாதங்கள் காத்திருந்தார். ஆனால், அவரின் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் மருத்துவப் பயிற்சி பெற வேண்டும் என்ற அவரது நீண்டநாள் கனவு நொறுங்கியது. மனமுடைந்த அவர் மீண்டும் ஐதராபாத் திரும்பியதாக கூறப்படுகிறது.

பள்ளி மானவி தற்கொலை

வீட்டில் தனியாக இருந்த ரோகிணி, அதிகளவில் தூக்கமருந்து அருந்தி மயங்கிய நிலையில் கிடந்தார். இதை அறிந்த அவரது பெற்றோர் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்தபோது, ரோகிணி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.இந்தச் செய்தியை கேட்டு அவரது பெற்றோர் பெரும் துயரத்தில் மூழ்கினர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!