வெயிலே தெரியல... இன்றுடன் கத்திரி வெயில் அக்னி நட்சத்திரம் நிறைவு!

 
 வெயிலே தெரியல... இன்றுடன் கத்திரி வெயில் அக்னி நட்சத்திரம்  நிறைவு!


 
தமிழ்நாட்டில்  கோடைகாலத்தில்  அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் மே 4ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை  தொடங்கியது. மே. 28 ம் தேதி வரை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.  கத்திரி வெயில் காலம் தொடங்கும் முன்பே பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் அக்னி நட்சத்திர காலத்தில் அது மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது.
ஆனால், கத்திரி வெயில் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வானம் மேகமூட்டதத்துடன் காணப்பட்டது. இரவு 9 மணிக்குப்பிறகு  சூறைக்காற்று வீசத் தொடங்கியது. காற்றைத் தொடா்ந்து மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் குளிா்ச்சியான நிலை உருவானது. நேற்று காலை முதல்  வெயில் தாக்கம் வெகுவாக இல்லாததால் மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.  

வெயில்
இதன்பிறகு, பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.  வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால் ஏற்படும் காற்று குவிதல் காரணாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இருப்பினும், உள் மற்றும் வடமாவட்டங்களில் வெப்பநிலை இயல்பாகவே இருந்தது.  
பருவநிலை மாற்றத்தால், தமிழ்நாட்டில் அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. இந்த ஆண்டில்  அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. ஜூன் முதல் வாரத்தில் கேரளத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கியதால், வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்ததாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

வெயில் மாஸ்க் மாணவிகள் இளம்பெண்கள்
இந்நிலையில், அக்னி நட்சத்திர காலமான 25 நாள்களில் பெய்த கோடை மழையால் வெயிலின் தாக்கம் பெரிய அளவில் இல்லாததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், சுட்டெரிக்கும் கத்திரி வெயில் இன்றுடன் மே 28ம் தேதி புதன்கிழமை நிறைவடைகிறது.
தற்போது, தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் வெயில் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழையின் தாக்கம் மூன்று நாட்களுக்குப் பிறகு மெதுவாகக் குறையக்கூடும், இதனால் வறண்ட காலநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது