எங்க போனாளோ தெரியல... மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார்... கணவர் கதறல்!

 
எங்க போனாளோ தெரியல... மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார்... கணவர் கதறல்! 

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் மட்ராக் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் தம்பதியர் ஜிதேந்திரகுமார் -அனிதா தேவி. இவர்களது மகள் ஷிவானி.

திருமணம் கல்யாணம் கும்பம்

ஜிதேந்திரகுமார் பெங்களூருவில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மகள் ஷிவானிக்கு, உத்தரகாண்ட்டில் வேலை செய்யும் ராகுலுடன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. ஏப்ரல் 16ம் தேதி திருமண நடைபெற இருந்த நிலையில், அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு இரு குடும்பாத்தாரும் உறவினர்களுக்கு வழங்கி வந்தனர்.

இந்நிலையில், 6ம் தேதி மணப்பெண்ணின் தாய் அனிதா தேவி, மணமகன் ராகுலுடன் மாயமாகி விட்டார். வீட்டில் இருந்த ரூ.3.50 லட்சம் ரொக்கப்பணம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் தூக்கிச்சென்று விட்டார். இதுகுறித்து மதராக் காவல்நிலையத்தில் புகார் அளித்த மணப்பெண் ஷிவானி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

5வது திருமணம்

“எனக்கு ஏப்ரல் 16ம் தேதி ராகுலுடன் திருமணம் நடக்க இருந்தது. என் தாய் ஏபர்ல் 6 ம் தேதி அவனுடன் ஓடிவிட்டார். ராகுல் என் தாயாருக்கு போன் வாங்கி கொடுத்த நிலையில், இருவரும் கடந்த 3 மாதங்களாக போனில் அதிகம் பேசி வந்தனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எங்களுக்கு கவலை இல்லை. என் தாயார் கொண்டு சென்ற பணம் மற்றும் நகைகளை எங்களிடம் திருப்பித் தர வேண்டும்” எனக் கூறியுள்ளார். இது குறித்து அனிதாவின் கணவர் ஜிதேந்திர குமார் ஏப்ரல் 6 ம் தேதி காலை 10 மணிக்கு தன் சகோதரியின் வீட்டிற்கு என்னை வரச் சொன்னார். அன்று இரவு 8:30 மணிக்கு நான் வீடு திரும்பியபோது, காலை முதல் அவள் காணாமல் போனதை உறவினர்கள் கூறினர். எல்லா இடங்களிலும் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. ராகுல் மற்றும் அனிதாவின் செல்போன்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். அவள் எங்கே இருக்கிறாள், இதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை” என அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அலிகாரில் நடந்த இந்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web