கல்யாண சேலை பிடிக்கல... திருமணநாளில் மணமகளை அடித்தே கொலை செய்த லிவ் இன் காதலன்!
பாவ்நகரில் நடைபெற இருந்த மகிழ்ச்சி மாலை, திடீரென துக்கத்தால் மூடப்பட்டது. திருமணத்தன்று சேலை பிடிக்கவில்லை என மணப்பெண் கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதம், அதிர்ச்சிகரமான கொலையில் முடிந்திருக்கிறது. 22 வயது சோனி ரதோட்டை, வருங்கால கணவன் சஜன் பரையா (26) இரும்புக் கம்பியால் தாக்கி கொன்றுவிட்டு தப்பியோடிய சம்பவம் பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருமண முகூர்த்தம் நெருங்கிய நிலையில் காலையில் சஜன், சோனி வீட்டுக்கு வந்தபோதுதான் எல்லாம் மாறிப்போயுள்ளது. திருமணத்திற்காக வாங்கிய சேலை பிடிக்கவில்லை என சோனி கூறியதிலிருந்து, உணவு மற்றும் திருமண செலவுகள் பற்றிய விவாதம் கடுமையான வாக்குவாதமாக மாறியதாக கூறப்படுகிறது. நொடிகளில் ஒலித்த தகராறு, சில நிமிடங்களில் கொடூரம் வரை சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோபத்தின் உச்சத்தில் சஜன் அருகில் இருந்த இரும்புக் கம்பியால் சோனியை தாக்கி, தலையை சுவரில் மோதியதாக போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது. சம்பவ இடத்திலேயே ரத்தத் துளியில் சரிந்த சோனி உயிரிழந்த நிலையில், சஜன் தப்பிச் சென்றுவிட்டான். முன்னதாக லிவ்-இன் உறவில் இருந்த இருவருக்கும், குடும்ப சம்மதத்துடன் நவம்பர் 15 அன்று திருமணம் நடைபெறவிருந்தது. குற்றவாளியை பிடிக்க சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
