யாருக்கும் பதில் சொல்ல தேவையில்ல... த்ரிஷா சர்ச்சையில் ஆதரவாக களமிறங்கிய குஷ்பு!
தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் நடிகை திரிஷா குறித்த செய்திகள்தான் பேசுபொருளாக உள்ளன. குறிப்பாக, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதே நாளில் (மே 19) நடிகை திரிஷாவின் பிறந்தநாளும் வருவதால், இது குறித்த மீம்களும் செய்திகளும் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. இதற்கிடையில், நடிகர் விஜய்யின் குடும்ப வாழ்க்கை மற்றும் திரிஷாவுடன் இணைத்துச் சொல்லப்படும் பல்வேறு யூகங்கள் குறித்தும் பலவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பாளர் வீட்டுத் திருமண நிகழ்வு மற்றும் விமான நிலையக் காட்சிகள் இந்த விவாதங்களை இன்னும் அதிகப்படுத்தின.
இந்நிலையில், திரிஷாவுக்கு எதிராக இணையத்தில் பரவி வரும் விமர்சனங்கள் குறித்து நடிகை குஷ்பு ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், "திரிஷா எனக்கு மிகவும் நெருக்கமானவர்; நான் சந்தித்தவர்களிலேயே மிகவும் மரியாதையான மற்றும் மென்மையான மனம் கொண்ட பெண் அவர். இப்போதுள்ள காலத்தில், யாராவது ஒரு சின்ன விஷயம் செய்தாலும் அதைக் குற்றம் சொல்ல ஒரு கூட்டம் இருக்கிறது. ஒருவரைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் கலாச்சாரம் தற்போது இங்கும் பரவியுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது," என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "இணையத்தில் அமர்ந்து கொண்டு பிறருடைய வாழ்க்கையைப் பற்றிப் பேசுபவர்கள், தங்கள் வாழ்க்கையை விடப் பிறரைப் பற்றிப் பேசுவதில்தான் சுகம் காண்கிறார்கள். இப்படி விமர்சிப்பவர்களில் 99.9% பேர் நமக்குத் தெரியாதவர்கள்தான். யாரோ ஒருவர் செய்யும் தவறுக்காக மற்றவர்களைக் குற்றம் சாட்டக்கூடாது. இதுபோன்றவர்களுக்குப் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை," என்று திரிஷாவுக்கு ஆதரவாகத் தனது கருத்தை முன்வைத்துள்ளார். குஷ்புவின் இந்தத் துணிச்சலான பேட்டி தற்போது சினிமா வட்டாரத்திலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
