என் பையக் காணோம்... ப்ளீஸ் கண்டுபிடிச்சு தாங்க... 3 ம் வகுப்பு சிறுமி காவல்நிலையத்தில் புகார்!
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் ஷுஜால்பூரில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. ஆட்டோவில் தவறவிட்ட தனது பள்ளிப் பையை மீட்பதற்காக, செரி என்ற 3 ம் வகுப்பு மாணவி தனது தந்தையுடன் நேரடியாக காவல் நிலையம் சென்றுள்ளார். பையில் உள்ள வீட்டுப் பாடக் குறிப்பேடுகள் இல்லாமல் எப்படி படிப்பது என கண்ணீருடன் கூறிய அந்தச் சிறுமியின் வார்த்தைகள் அனைவரின் மனதையும் தொட்டது.
School Bag खोया तो थाने पहुंची बच्ची, पुलिस ने भी 24 घंटे के अंदर बैग ढूंढ के दिया। #madhyapradesh #madhyapradeshpolitics #viralvideo #bhumitimes pic.twitter.com/cP2ouhWscG
— Bhumi Times (@BhumiTimes) December 27, 2025
சிறுமியின் கல்வி மீது இருந்த ஆர்வத்தையும், நேர்மையான மனதையும் பார்த்த காவல் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். தனிப்படை அமைத்து நகரின் பல பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை கண்டறிந்தனர். தீவிர தேடுதலுக்குப் பிறகு, பை பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அந்தப் பையை சிறுமியிடம் ஒப்படைத்த போது, அவரது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு சிறுமியின் கல்வி கனவுக்கு காவல்துறை துணையாக நின்ற இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
