என் குழந்தைகளிடம் நான் இன்றுவரை ஆங்கிலத்தில் பேசமாட்டேன்... நமீதா பெருமிதம்!

இன்று ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம். இதனை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் யோகா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆளுநர் விருட்சசனம், புஜங்காசனம் மற்றும் தனுரசசனம் என பல யோகா ஆசனங்களைச் செய்தார்.
அந்த வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம், காக்கா தோப்பு பகுதியில் உள்ள அதி நர்சிங் கல்லூரியில் நடந்த சிறப்பு யோகா பயிற்சியில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா கலந்து கொண்டார். அவருடன் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் பங்கேற்றார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நமீதா, “யோகா என்பது புதியது என்று மக்கள் நினைக்கிறார்கள், அதனால்தான் ஜூன் 21 ம் தேதி யோகா தினமாகக் கொண்டாடுகிறோம். ஆனால் இது 5000 ஆண்டு பழமையான பாரம்பரியம், அதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். நான் அதைப் பின்பற்றப் போகிறேன் என முடிவு செய்துள்ளேன்” என்றார்.
”என் குழந்தைகளிடம் நான் இன்றுவரை ஆங்கிலத்தில் பேசமாட்டேன். அவர்களுக்கு தமிழ், தெலுங்கு, குஜராத்திதான் தெரியும். ஏனெனில் அவையே அவர்களின் தாய்மொழி. ஆங்கிலத்தை டிவியிலோ, அல்லது வேறு எங்கோவோ அவர்கள் கற்றுக் கொள்ளட்டும்”’ எனக் கூறினார். ”என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் தெரியாது.’ஜெய் ஹனுமான்’தான் கண்டிப்பாக தெரியும் என்பதை பெருமையாக சொல்வேன்” என பேசியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!