“பொண்டாட்டி டார்ச்சர் தாங்கலை... நிரந்தரமா தூங்கப்போறேன் அம்மா...” உருக்கமாக கடிதமெழுதி மகன் தற்கொலை!

“அம்மா... என் பொண்டாட்டி டார்ச்சர் தாங்கலை.. நான் நிரந்தரமாக தூங்கப் போறேன்” என தனது தாயாருக்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு, 28 வயது இளைஞர் ஒருவர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் ராஜ் ஆர்யா(28). இவர் சிம்ரன் எனும் இளம்பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், இவரது காதலுக்கு பெற்றோர் சம்மதித்து திருமணமும் செய்து வைத்தனர். அதன் பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நீடித்து வந்த நிலையில், சிம்ரனின் சகோதரர் காவலராக பணிபுரிந்து வந்ததால், ராஜ் மீது தாக்குதல் நடத்தியதோடு, அவரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, காவல் நிலையத்தில் வைத்து ராஜைத் தொடர்ந்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன் ராஜ், தனது மனைவியை திருமண நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக சஹாரன்பூரில் அவரது மாமனார் வீட்டிற்கு அழைத்து செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் சிம்ரனின் குடும்பம் அதை எதிர்த்து, ராஜையும் அவரது தந்தையையும் தாக்கியதாக ராஜின் சகோதரி புகார் தெரிவித்துள்ளார். பின்னர் சிம்ரனின் குடும்பம், ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு வீடு திரும்பிய ராஜ் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், “நான் இப்போது தூங்கப்போகிறேன், என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என தாயிடம் கூறியுள்ளார். தாயார் அதை சாதாரண மன அழுத்தம் எனக் கூறினாலும் அவரை எழுப்ப சென்றபோது, ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
ராஜ் குடும்பத்தினர், இது ஒரு திட்டமிட்ட துன்புறுத்தல் காரணமாக நிகழ்ந்த தற்கொலை எனக் கூறி, சிம்ரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!