பிரேக் பிடிக்கல... தடுப்புச் சுவரில் மோதிய அரசுப் பேருந்து... கூச்சலிட்ட பயணிகள்!

தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் கோவை வேலந்தாவளம் பகுதிக்கு கோவை உக்கடம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வழக்கம் போல இன்று பிப்ரவரி 23ம் தேதி காலை வேலந்தாவளம் பகுதியில் இருந்து கோவை, உக்கடம் நோக்கி வந்த வழித்தடம் என் 48 என்ற அரசுப் பேருந்து, சுகுணாபுரம், மைல்கல் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது, திடீரென பேருந்து பிரேக் பிடிக்காததால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இந்த திடீர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக அந்தப் பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகளும் உயிர்தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், அந்தப் பேருந்தில் இருந்த பயணிகளை வேறு பேருந்துக்கு மாற்றி அனுப்பி வைத்தனர். இது குறித்து வெரைட்டி ஹால் போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!