“பொண்டாட்டி வேணாம்... கள்ளக்காதலியுடன் சேர்த்து வைங்க...” செல்போன் டவர் மீதேறி இளைஞர் தற்கொலை மிரட்டல்!
“எனக்கு என் பொண்டாட்டி வேண்டாம். என்னுடைய கள்ளக்காதலியுடன் சேர்த்து வெச்சுடுங்க” என்று செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆராய்ச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன்(30). இவருக்கு பிரியதர்ஷினி எனும் பெண்ணுடன் இருவீட்டுப் பெற்றோர்களும் பார்த்து நிச்சயித்த நிலையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், பிரியதர்ஷினி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான மாரீஸ்வரன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு சென்று மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அதே ஊரை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி கணவனை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றார். தன்னை அடித்து துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மாரீஸ்வரனை விசாரணைக்கு அழைத்தனர். குடிபோதையில் காவல் நிலையத்திற்கு வந்த மாரீஸ்வரன், காவல் நிலையத்தின் பின்புறம் இருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார்.
செல்டவரின் மீது அமர்ந்தபடி, “எனக்கு என் மனைவி வேண்டாம். கள்ளக்காதலியைத் தான் எனக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும். செலவுக்கு வாரத்திற்கு ரூ.30,000 கொடுக்க வேண்டும்” என போலீசாரை மிரட்ட தொடங்கினார். தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு, இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் கீழே இறக்கப்பட்டார். தற்கொலை முயற்சி வழக்கில் மாரீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
