சரியா பேசல... காட்டுக்கு அழைத்து சென்று இளம்பெண் கொலை... கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்!

 
கொலை


 
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம், திருநாராயணபுரம், அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர்  டெய்லர் சங்கர் .   இவருடைய  மனைவி 38 வயது செல்வராணி . இவர்களுக்கு  மகன், மகள் உள்ளனர். இதில் செல்வராணி மேலக்கோட்டையூரில் உள்ள ஐஐஐடி கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். அதே கல்லூரியில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்யும் குமரேசன் (31) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக மாறிவிட்டது. 

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
இதனிடையே அதே கல்லூரியில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் என்பவருடன் செல்வராணிக்கு நெருக்கும் ஏற்பட்டது. இதனால் குமரேசனுடன் பழகுவதை செல்வராணி நிறுத்திவிட்டார். மார்ச் 3ம் தேதி  வீட்டிலிருந்து சென்ற செல்வராணி மாலை வீடு திரும்பவில்லை. இது குறித்து கணவர் சங்கர் தாழம்பூர் போலீஸில் புகார் செய்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, செல்வராணியின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர்.

குமரேசனை பிடித்து விசாரணை செய்தபோது அவர் செல்வராணியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் வாக்குமூலத்தில்   ``என்னுடன் இருந்த தொடர்பை செல்வராணி துண்டித்ததால் ஆத்திரத்தில் இருந்தேன். எனது மகனுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது எனக் கூறி செல்வராணி நம்பவைத்து மார்ச் 3ம் தேதி எனது பைக்கில் செல்வராணியை கீரப்பாக்கத்திலிருந்து கல்வாய் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள குமிழி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு  அவரது துப்பட்டாவில் கழுத்தை நெறித்து கொலை செய்தேன்'' என கூறியுள்ளார்.  

ஆம்புலன்ஸ்

இதனையடுத்து குமரேசனை போலீஸார் அழைத்துச் சென்று காட்டில் அழுகிய நிலையில் இருந்த செல்வராணியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து  குமரேசனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web