“ரூ.8,000 கொடுத்தா தான் ஆச்சு” லஞ்ச ஒழிப்புத்துறை விரித்த வலையில் சிக்கி அதிகாரி!

 
லஞ்சம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பூச்சிக்கொல்லி மருந்து கடைக்கு உரிமம் (லைசென்ஸ்) வழங்கியதற்காக லஞ்சம் வாங்கிய வேளாண்மை உதவி இயக்குநர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரிடம் கையும் களவுமாகச் சிக்கிய சம்பவம் அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த மாதம் புதிதாகப் பூச்சிக்கொல்லி மருந்து கடை ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்தத் தொழிலுக்கான அரசு உரிமத்தை வழங்கிய வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன், கடந்த சில நாட்களாகக் கணேசனுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.

லஞ்சம் பணம் ஊழல்

"நான் தான் உனக்கு லைசன்ஸ் கொடுத்த அதிகாரி, எனக்கு அலுவலகச் செலவுகள் அதிகமாக இருக்கிறது; எனவே எனக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்" என்று கேசவராமன் கேட்டுள்ளார். ஆனால் அவ்வளவு பெரிய தொகையைத் தர முடியாது என்று கணேசன் மறுத்துள்ளார். விடாத அதிகாரி, தனது லஞ்சத் தொகையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, இறுதியாக "8 ஆயிரம் ரூபாயாவது இன்று மாலைக்குள் எனது அலுவலகத்திற்கு வந்து கொடு" என்று கறாராகக் கூறியுள்ளார். அதிகாரியின் அடாவடிப் போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த கணேசன், அவருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாமல் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார்.

மகிழ்ச்சி! அரசு அலுவலகங்களில் லஞ்சம் தர தேவையில்லை!

போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய 8 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கணேசன் இன்று மாலை கேசவராமனின் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். அந்தப் பணத்தை அவர் அதிகாரியிடம் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் படை போலீசார் பாய்ந்து வந்து கேசவராமனைச் சுற்றி வளைத்தனர். ரசாயனம் தடவிய நோட்டுகளைத் தொட்டதால் அவரது கைகள் நிறம் மாற, கையும் களவுமாக அவர் பிடிபட்டார்.

உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவரிடம், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேர்மையான முறையில் தொழில் செய்ய நினைப்பவர்களிடம் இதுபோன்று லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!