நடிகர் சிவாஜி கணேசன் அன்னை இல்லத்தில் எனக்கு உரிமையோ, பங்கோ கிடையாது... . ராம்குமார் நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம்!

 
சிவாஜி கணேசன்


தமிழ் திரையுலகில் நடிப்பு இமயம்  மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில் தகராறு நீதிமன்றம் வரை வந்துள்ளது.  நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். 

சிவாஜி
பட தயாரிப்புக்காக   தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை  திருப்பி செலுத்தாததால்,  வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை தர வேண்டும். அத்துடன்   ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தர்  2024ல்  உத்தரவிட்டார்.
 
இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும். அத்துடன்  பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டின் ஒரு பகுதியை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. 

சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி


இந்நிலையில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த  வழக்கில் அன்னை இல்லம் வீடு தனக்கு சொந்தமானது எனவும், சகோதரர் வாங்கி கடனுக்கு தான் எப்படி பொறுப்பேற்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில்  ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அன்னை இல்லத்தின் மீது ராம்குமாருக்கு எந்த உரிமையும் அல்லது பங்கும் இல்லை என குறிப்பிட்டார். இதனையடுத்து, அன்னை இல்லத்தின் மீது தனக்கு தற்போது, எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை எனவும் எதிர்காலத்திலும் அவ்வாறு எந்த உரிமையும் கோரமாட்டேன் எனவும் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி  ராம்குமாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து  நீதிபதி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?