4,5 முறை தற்கொலைக்கு முயற்சித்து 9 கிலோ வரை எடை குறைந்துள்ளேன்... பாலியல் வழக்கில் சிக்கிய மதபோதகர்!

 
ஜான் ஜெபராஜ்
தமிழகத்தில் கோவையில் வசித்து வரும்  மதபோதகர் ஜான் ஜெபராஜ் . 37 வயதாகும் இவர் மீது 2 சிறுமிகள்  பாலியல் புகார் அளித்தது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த இவர், கோவையில் காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ சபையில் பணிபுரிந்து  வந்தார்.

ஜான் ஜெபராஜ் பாப் இசை நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்களை ஈர்த்து வந்தார். இவர் தமிழகம் உட்பட  பிற மாநிலங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். 2024 மே 21ம் தேதி  நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்று அவர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்துள்ளனர்.  
இந்த தகவலை அடுத்து  கோவை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அவர் பெங்களூருவில் பதுங்கியிருக்கலாம் என்ற ரகசிய தகவலின் அடிப்படையில், அந்த நகரத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜான் ஜெபராஜ்

மேலும், அவரது சொந்த ஊரான நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களிலும் தேடுதல் வேட்டை தொடர்கிறது.  இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் ஜான் ஜெபராஜ் பேசிய ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அதில் தனது மனைவியிடம் என்ன நடந்தது என்று உனக்கும் தெரியும். சிறிய பிரச்சனையை வைத்து ஒருவர் நம்மிடம் விளையாடி விட்டார்.  உனக்கு ஒரு விஷயம் புரிய வேண்டும். இந்த மாதிரி பிரச்சினைகள் நடக்கிற போது எல்லா மனிதருக்கும் முதலில் தோன்றுவது தற்கொலை எண்ணம் தான். நான் நான்கு ஐந்து முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளேன். மூன்று மாதம் மன அழுத்தத்தில் இருந்தேன் சாப்பிடவில்லை. ஒன்பது கிலோ வரை எடை குறைந்து விட்டேன்.

ஜான் ஜெபராஜ்

நான் தவறு செய்துவிட்டு அது செய்தேன் இது செய்தேன் எனக் கூறுகிறாய் என நினைக்கலாம். என்ன நடந்தது என்று நமக்கு தெரியும். நான் தவறு செய்திருந்தால் அதை கடவுள் பார்த்துக் கொள்வார். இந்த ஆடியோவுடன் கூடவே, அவர் வெளியிட்டுள்ள மற்ற ஆடியோக்களும் தற்போது பரவி வருவதால், அவற்றை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web