6 வருஷமா குழந்தைகளைப் பார்க்காம இருந்திருக்கேன்... அரசியலை விட்டு விலகமாட்டேன்.. காளியம்மாள்!

 
காளியம்மாள்
அரசியலை விட்டு ஒருபோதும் விலக முடியாது. அரசியல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆறு வருஷமா என் குழந்தைகளையும் பார்க்காம இருந்திருக்கேன் என்று தூத்துக்குடியில் சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் பேட்டியளித்துள்ளார்.

மீனவர்களை பழங்குடி இன பட்டியலில் சேர்க்கிறோம் என்று அனைத்து கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகள் அளித்து வருகின்றனர் ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை 

கச்சத்தீவு என்பது தேர்தல் நேரத்திற்கான ஒரு சொல்லாடல். கச்சத்தீவு என்பது தமிழக மக்களின் சொத்து இதனை எடுத்துக் கொடுக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது.  கச்சத்தீவு மீட்பு என்பது எங்களின் உரிமை மீட்பு  நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடந்து வரும் நிலையில் கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் எடுக்கிற திட்டத்தை கொண்டுவர  அனுமதி வழங்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது .

காளியம்மாள்

கடல் சூழ்நிலையில் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய பெட்டகம். கடலோர கோவில் மக்களிடம் எந்தவித கருத்து கேட்கும் ஆகவில்லை. ஜனநாயகநாடு என்று சொல்லிக் கொண்டிருக்கும் நமது நாட்டில் கடலோர மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, பாதிப்பை உணராமல் அனுமதி கொடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது

சேது சமுத்திரத் திட்டம் ஃபெயிலியர் திட்டம் என்று அன்று நாங்கள் சொன்னோம். கேட்கவில்லை. மக்களின் வரி பணம் ரூ.1,200 கோடியைக் கடலில் கொட்டி சேது சமுத்திரத் திட்டத்தை இன்று நீங்கள் பெயிலியர் என்று சொல்கிறீர்கள். அதேபோன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் பெயிலியர்  என்று சொல்கிறோம். 

காளியம்மாள்

ஆறு ஆண்டு காலம் குழந்தைகளை கூட பார்க்காமல் அரசியல் களத்தில் நின்று இருந்தேன்.  என் குழந்தைகள் என்னுடனே இல்லை. எனது தாயின் வளர்ப்பில் வளர்ந்துள்ளது. தற்போது குழந்தை எங்கள் ஊரில் பள்ளியில் சேர்த்து என்னோடு இருக்கின்றனர். இப்போது தான் தேர்வு முடிந்துள்ளது. அவர்கள் கூட இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கும்  இரண்டு மாத காலம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால் திடீரென்று மற்றொரு இடத்திற்கு ஓட  முடியாது அல்லவா. ஆனாலும் மக்கள் பணியில் தான் இருந்து கொண்டிருக்கிறேன் அரசியலை விட்டு ஒருபோதும் விலக முடியாது அரசியல் இல்லாமல் வாழ்க்கை இல்லை” என்று சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web