வைரல் வீடியோ... சுந்தர் பிச்சை பளீச்.... நான் சென்னை பள்ளிகளில் தான் ஹிந்தியை கற்றுக் கொண்டேன்!

கூகுள் நிறுவனத்தின் சி இஓ சுந்தர்பிச்சை தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் நான் தமிழ்நாட்டில் சென்னையில் பள்ளிகளில் இந்தி கற்றுக்கொண்டேன் என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். சுந்தர் பிச்சை 1972 ல் பிறந்தார், காங்கிரஸ் அரசாங்கத்தின் போது இந்தி கற்றுக்கொண்டதாக கூறுகிறார். அப்போது இந்தி தமிழ்நாட்டில் 3வது மொழியாக இருந்ததாக கூறுகிறார். இவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
🚨 Sundar Pichai who comes from Chennai, Tamil Nadu says — "I learnt Hindi in Schools" 👌
— Megh Updates 🚨™ (@MeghUpdates) March 13, 2025
Sundar Pichai was born in 1972, learnt Hindi during Congress govt.
— Clearly, Hindi was 3rd language in Tamil Nadu.
One more AGENDA against Modi govt Exposed...! 🎯 pic.twitter.com/7kI7y5EEfJ
மும்மொழிக்கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. செயல்படுத்தினால் மட்டுமே கல்விக்கான நிதியை விடுவிக்க முடியும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இவரின் கருத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது பேச்சு பெரும் அதிர்வலைகளை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சுந்தர் பிச்சை பேசும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!