“நான் தவறு செய்து விட்டேன்... மகனை கவனித்துக் கொள்ள வேண்டும்”... நீதிமன்றத்தில் கதறிய ஸ்ரீகாந்த்... ஜாமீன் கேட்டு மனு!

 
ஸ்ரீகாந்த்


போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர்  ஸ்ரீகாந்துக்கு  வரும் ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி தயாளன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட அவரை காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், ‘நான் தவறு செய்து விட்டேன். மகனை கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறி நீதிபதி தயாளனிடம் ஜாமீன் கேட்டு நடிகர் ஸ்ரீகாந்த் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஸ்ரீகாந்த்

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், 8 முறை போதைப் பொருள் வாங்கி கொடுத்ததாக கூறப்படும் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. நுங்கம்பாக்கம் பப்-ல் தகராறு, வேலை வாங்கித் தருவதாக மோசடி என மொத்தம் 5 வழக்குகளில் ஏற்கனவே கைதாகி குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் உள்ளார் பிரசாத்.

இந்நிலையில் போலீசாரிடம் ஸ்ரீகாந்த் சொன்னது என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. ஸ்ரீகாந்த் போலீசாரிடம் முகத்தை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அவர் சொன்னபடியே நியூஸ் பேப்பர் கொடுத்து அவரின் முகத்தை மூடிக்கொள்ள போலீசார் அனுமதித்துள்ளனர். 

பிரசாத் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் வந்த நிலையில், அவர் யாரிடம் போதைப்பொருளை வாங்கினார், யாருக்கு விநியோகம் செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பிரசாத்தின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் என்பவரையும் விசாரித்தனர். 

அப்போது, பிரதீப் மூலமாக ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் வழங்கியதை பிரசாத் ஒப்புக்கொண்டார். கிட்டத்தட்ட இவர்கள் கொக்கைன் டீலர்களாக செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஸ்ரீகாந்த்

இவரிடம் பல நடிகர்கள், நடிகைகள் போதைப்பொருள் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த், கிளப் மற்றும் பார்களில் நடக்கும் விருந்துகளில் கலந்து கொண்டதாகவும் அதன் மூலம் அதிமுக நிர்வாகி இவரிடம் போதை பொருட்களை விற்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு கிராம் கொக்கைனை ரூ.12,000-க்கு இவர் விற்றதாக கூறப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் இருந்து 40 முறை போதைப்பொருளை பயன்படுத்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் ஸ்ரீகாந்த் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது