35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு செய்தேன்... ராமதாஸ் பரபரப்பு!
பாமகவில் கடந்த சில நாட்களாகவே உட்கட்சி பூசல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல் முற்றியதை எடுத்து அன்புமணியே கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.

ஆனால் நான் தான் பாமக தலைவர் என அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கூறி வருகிறார். இதனை தொடர்ந்து ராமதாஸ் கூட்டிய பல்வேறு கட்சி கூட்டங்களில் அன்புமணி கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்தேன்.தவறு செய்தது அன்புமணி அல்ல, 35 வயதில் மத்திய அமைச்சராக்கி நான் தான் தவறு செய்து விட்டேன். அன்புமணி தான் தவறு செய்து தவறான ஆட்டத்தை துவங்கினார். நான் என்ன தவறு செய்தேன் என அன்புமணி பேசியது, முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி என கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
