விஜய் வெற்றிபெற பிரார்த்தனை செய்கிறேன்... ரவி மோகன்!
தவெக தலைவர் விஜய்யின் வெற்றிக்காக சாத்தியமான எல்லா இடங்களிலும் பிரார்த்தனை செய்துள்ளதாக நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார். தில்லியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் பராசக்தி திரைப்படக் குழுவினரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், தில்லியின் மையத்தில் பொங்கல் விழா நடைபெறுவது தமிழ் மக்களுக்கு பெருமை என கூறினார். பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சி அளித்ததாகவும், அவரது ஆளுமை பிரம்மாண்டமாக இருப்பதாகவும் தெரிவித்தார். சினிமாவை பொழுதுபோக்கு துறையாகவே பார்க்க வேண்டும், அதிலிருந்து அரசியலை விலக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், மக்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடவே திரைப்படங்களை பார்க்கிறார்கள் என்றார். படங்களில் நல்லது இருந்தால் எடுத்துக் கொள்ளலாம், இல்லையெனில் விட்டுவிடலாம் என்றார். விஜய்யின் ரசிகனாக அவரது வெற்றிக்காக எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் பிரார்த்தனை செய்ததாகவும், தன்னை அவரது தீவிர ரசிகன் என்பதை எப்போதும் நிரூபித்துள்ளதாகவும் ரவி மோகன் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
