இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை ஒரு ஃபோன்காலில் தடுத்தேன்”... நேட்டோ உச்சி மாநாட்டில் ட்ரம்ப் மீண்டும் கெத்து!

 
ட்ரம்ப்
 


 
இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியது. 4 நாட்கள் நடைபெற்ற இந்தியா  பாகிஸ்தான் மோதலில்  ஆளில்லா விமானம், ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டன.  மே 10 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவ மோதலை நிறுத்தின.  இந்நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நிறுத்தியதாகவும், சண்டை தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது எனவும் எச்சரிக்கை விடுத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார்.
அதிபர் ட்ரம்ப் எங்கு சென்றாலும் சரி இந்தக் கூற்றை முன்வைக்கும் எந்த வாய்ப்பை தவறவிடுவதில்லை.  போர் பற்றிய கேள்வி எழுப்பும் போதெல்லாம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை  அமெரிக்கா தான் நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.


நெதர்லாந்து தலைநகர் ஹேக்கில் நடைபெற்ற  நேட்டோ உச்சிமாநாட்டின் போது ட்ரம்ப்  ​​இதனை மீண்டும் பேசியிருக்கிறார். அங்கு  தனது தொலைபேசி அழைப்பின் மூலம் மட்டுமே இரு நாடுகளுக்கு (இந்தியா – பாகிஸ்தான்) இடையே அமைதியை நிலைநாட்டியதாகக் கூறியிருக்கிறார்.  முதலில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை நிறுத்துவது குறித்து  அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகுதான் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி நிலைநாட்டப்பட்டது எனக் கூறினார்.  தொடர்ந்து பேசி கொண்டிருக்கையில், ”இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நான் முடிவுக்குக் கொண்டு வந்தேன், அணுசக்திப் போரைத் தடுத்தேன். நான் சொன்னேன், ‘பாருங்கள், நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டால்… அது மிகவும் மோசமாக இருக்கும், கடைசி தாக்குதல் எவ்வளவு மோசமாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அது உண்மையில் மிகவும் மோசமாக இருந்தது.

‘பிரதமர் மோடி என்னுடைய மிகவும் நல்ல நண்பர். அவர் ஒரு ஜென்டில்மேன், அவர் ஒரு சிறந்த மனிதர். நான் அவருக்கு விளக்கினேன். நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டால், எங்களுக்குள் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாது என எடுத்து  சொன்னேன். அவர் என்ன சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியும். இல்லை, நான் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறேன். நாங்கள் அணு ஆயுதப் போரை நிறுத்தினோம்’ என டிரம்ப் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது