செருப்பு போட்டுக் கொண்டேன்... 2026 ல் கண்டிப்பாக திமுக ஆட்சி அகற்றப்படும்... அண்ணாமலை ஆவேசம்!

தமிழகத்தில் பாஜக கட்சியின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகியுள்ள நிலையில் அவருக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணாமலை ”திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போடமாட்டேன் என ஏற்கனவே சபதம் போட்டிருந்தேன். தற்போது புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் அண்ணாமலையின் கைகளில் செருப்பை கொடுத்து அணியுமாறு வேண்டுகோள் விடுத்தார். நேற்று பதவி ஏற்பு விழாவின்போது நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்ததால் அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொணடு மீண்டும் செருப்பு போட்டார்.
இந்நிலையில் சபதத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாகவே செருப்பு போட்டதற்கான காரணத்தை 2026 ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்று முதல் நான் சாதாரண தொண்டன். பாஜக மாநில தலைவர் சொல்வதைக் கேட்கும் கடமை எனக்கு இருக்கிறது. மாநிலத் தலைவரின் கட்டளையை ஏற்றுக்கொண்டு அவர் வாங்கிக் கொடுத்த செருப்பை நான் அணிந்து கொண்டேன். மேலும் 2026 ம் ஆண்டு கண்டிப்பாக திமுக ஆட்சியை அகற்றப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!