நெனைச்சாலே நடுங்குது... அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுக்கு பதிலாக நைட்ரஸ் ஆக்சைட்... இளம்பெண் மரண வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு!

 
மதுரை நீதிமன்றம்
மதுரை அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துக் கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண்ணுக்கு ஆக்சிஜனுக்கு பதிலாக தவறுதலாக நைட்ரஸ் ஆக்சைடு ஏற்றப்பட்டதில், இளம்பெண் கோமா நிலைக்கு சென்று, பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்தான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுக்களை மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ருக்மணி. இவர் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்காக கடந்த 2011ல் நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் ருக்மணிக்கு ஆக்சிஜனுக்கு பதிலாக தவறுதலாக நைட்ரைஸ் ஆக்சைடு வாயு செலுத்தப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். 

பள்ளி மானவி தற்கொலை

இது தொடர்பாக, பணியில் கவனக்குறைவாக இருந்தாக செயல்பட்டதாக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என 12 பேர் மீது ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மருத்துவர் ரவீந்திரன் மற்றும் விவேகானந்தன், பர்னபாஸ், ராஜ்குமார், தேவி, மாயகிருஷ்ணன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: ''குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுக்கு பதிலாக, நைட்ரஸ் ஆக்சைடு ஏற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தவறு காரணமாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.28 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

மருத்துவர்கள் எப்படியும் உயிரை காப்பாற்றி விடுவார்கள் என நம்பியே நோயாளிகள் மருத்துவர்கள் சொல்வதை கேட்கின்றனர். இதனால் மருத்துவர்கள் அதிகப்படியான பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுதாரர்கள் மீதான வழக்கை தினமும் விசாரணை நடத்தி 6 மாதத்தில் முடிக்க வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web