"என் ரசிகர்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்!" - கார் விபத்திற்குப் பின் நடிகர் அஜித் பேட்டி!
நடிகர் அஜித்குமார் தற்போது துபாயில் நடைபெற்று வரும் '24 ஹெச் சீரிஸ்' (24H Series) மத்திய கிழக்கு டிராபி கார் பந்தயத்தில் தனது சொந்த அணியுடன் பங்கேற்று வருகிறார். இந்தப் போட்டியின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்து ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
பந்தயத்தின் போது அஜித்குமார் ரேஸிங் அணியின் கார் திடீரென என்ஜின் கோளாறு காரணமாகத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காரை ஓட்டிச் சென்ற வீரர் அயர்டன் ரெடான்ட் (Ayrton Redant), கார் தீப்பற்றியவுடன் உடனடியாகச் சமயோசிதமாகச் செயல்பட்டுக் காரை நிறுத்திவிட்டு வெளியே குதித்தார். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
Here is the interview of #AjithKumar sir which he talked about his fans.
— Mᴀᴀʟɪᴋ Bʜᴀɪ (@Maalik_Bhai) January 17, 2026
“Extremely grateful to them, I am feeling little sorry for them and they couldn't see me driving and to see me finish on the podium. But I promise good days around the corner, we will make them proud” pic.twitter.com/8KmCxvVU2O
முன்னதாகப் பயிற்சி மற்றும் தகுதிச் சுற்றுகளின் போதும் அஜித் அணியின் கார்கள் சில விபத்துகளைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. விபத்து காரணமாகப் பந்தயத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும், தன்னை நேரில் காணத் திரண்ட ரசிகர்களுக்காக அஜித் தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்:
"எனக்கு ஆதரவு கொடுக்கத் திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதையோ அல்லது எங்கள் அணி பரிசு வெல்வதையோ பார்க்க முடியாமல் போனது எனக்குப் பெரிய வருத்தத்தை அளிக்கிறது. என் ரசிகர்களுக்கு நான் சத்தியம் செய்கிறேன், நல்ல காலம் காத்திருக்கிறது. எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் உங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தும்."
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
