யாரையும் சும்மா விடமாட்டேன்.. பாஜகவுக்கு முன்னாள் மத்திய அமைச்சரின் மகள் மிரட்டல்!

 
ரோகிணி

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ். இவர் மத்திய அமைச்சராக இருந்தபோது பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தியும் வருகிறது. இதனிடையே அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 

இந்த நிலையில் லாலு பிரசாத்தின் மகள் ரோகிணி, தன் தந்தைக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை அளிக்க முன்வந்தார். அதன்படி தனது ரோகிணி சிறுநீரகம் தானம் அளித்து தனது தந்தைக்கு புதுவாழ்வு கொடுத்தார். இந்த நடவடிக்கை பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ரோகிணி

அதன்படி, சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு, நாடு திரும்பி லாலு பிசாரத் யாதவ், டெல்லியில் பண்டாரா பார்க்கில் உள்ள மகள் மிசா பாரதி இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார். 

இந்த நிலையில், அவரிடம் சிபிஐ விசாரணை முடிவு செய்தது. ரயில்வேயில் வேலை வழங்கிவிட்டு லஞ்சமாக நிலங்களைப் பெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் லாலு பிரசாத் யாதவிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். இதற்காக நேற்று காலை 10.40 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் 2 கார்களில் அங்கு சென்றனர். சுமார் 2 மணி நேரம் விசாரணை முடிந்து சிபிஐ அதிகாரிகள் 12.55 மணிக்கு புறப்பட்டுச்சென்றனர்.  

ரோகிணி

இந்தநிலையில், லாலு பிரசாத்தின் மகள் ரோகிணி தனது டுவிட்டர் பக்கத்தில், எங்க அப்பாவை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறீர்கள். இது சரியல்ல. இதனால் அவருக்கு ஏதாவது நேர்ந்தால் நான் யாரையும் விட்டு வைக்க மாட்டேன். டெல்லி நாற்காலியை அசைப்போம். இதெல்லாம் நினைவில் இருக்கும். நேரம் சக்தி வாய்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார். லாலு பிரசாத்தின் மகள் ரோகிணி, மத்தியில் ஆட்சி  செய்யும் பாஜகவை மறைமுகமாக சாடியுள்ளார். இதனால் பீகார், டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web