"யாராக இருந்தாலும் தயங்கமாட்டேன்"... மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை!
தேர்தல் நெருங்கும் வேளையில் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் மெத்தனப் போக்கை அறவே தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தி பேசியுள்ளார்.
அப்போது, "தேர்தல் வருகிறது, இப்போது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என யாராக இருந்தாலும் தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன்" என முதல்வர் எச்சரித்துள்ளார்.

தனிநபர்களை விடக் கட்சிதான் முக்கியம் என்றும், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கட்சியின் ஒவ்வொரு பரப்புரையையும், வாக்குச்சாவடி நிலை முகவர்களின் (BLC) பணிகளையும் தாம் நேரடியாகக் கண்காணிக்கப் போவதாகத் தெரிவித்தார்.
"கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன். 234 தொகுதிகளிலும் நானே (ஸ்டாலின்) வேட்பாளராகக் களம் காண்பதாக நினைத்துத் தொண்டர்கள் உழைக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.

தோழமைக் கட்சிகளில் சிலருக்கு திமுகவைப் பிடிக்காமல் இருக்கலாம், அவர்கள் குழப்பத்தை விளைவிக்கலாம். ஆனால், அதற்கு நாம் இடம் கொடுத்து விடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். பூத் கமிட்டி உறுப்பினர்களை (BLC) ஒருங்கிணைத்து 4 மண்டலங்களிலும் தலா ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடுகள் நடத்தப்படும் என அறிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
