ஐசிசி நடத்தை விதிமீறல்... மேற்கிந்திய தீவுகள் வீரருக்கு அபராதம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜெய்டென் சீல்ஸுக்கு ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங் தேர்வு செய்து 180 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் பாட் கம்மின்ஸ் விக்கட்டை வீழ்த்திய மே.இ.தீ. அணி வீரர் ஜெய்டென் சீல்ஸ் கிளம்பு என்பது போல சைகை காண்பித்துள்ளார்.
ஐசிசி நடத்தை விதிமுறையின்படி ஜெய்டென் சீல்ஸுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஜெய்டென் சீல்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!