இந்திய வீரர்களின் நடத்தை பற்றி ஐசிசியிடம் முறையிடுவோம்... பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், போட்டியின் போது இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் இடையிலான வாக்குவாதங்கள் மற்றும் கைகுலுக்காத நிலை உண்டானது.
இதற்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய வீரர்களின் நடத்தை தொடர்பாக ஐசிசியிடம் முறையிடுவதற்கு தீர்மானித்துள்ளது. வாரியத் தலைவர் மோஷின் நக்வி, இந்த சம்பவம் அரசியல் மற்றும் விளையாட்டை தனித்தனியாக பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் சர்ஃபராஸ் அகமது, இந்திய வீரர்கள் இறுதிப்போட்டியில் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லை என்பதையும், இந்த விஷயம் ஐசிசியிடம் முறையிடப்படும் என உறுதி செய்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
