இங்க.. இட்லி, தோசை சுட வரலை! ஆவேசமான பாஜக அண்ணாமலை..! வெச்சு செஞ்ச எடப்பாடி!

 
அண்ணாமலை

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரசியலில் பெரும் பரபரப்பு நிலை நீடித்து வருகிறது. அதிலும் சமீப காலமாக தமிழகத்தில்  தேசிய கட்சியான பாஜகவிலிருந்து நிர்வாகிகள் தங்களது பொறுப்பில் இருந்து விலகி வருகின்றனர். இது  பாஜக தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார், பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திலிப் கண்ணனும் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இபிஎஸ்

நிர்மல் குமாரை போல் தனது ட்விட்டர் பக்கத்தில் திலிப் கண்ணனும், அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பாஜக அறிவுசார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணனும் அதிமுகவில் இணைந்து விட்டார்.   பாஜக மாநில விளையாட்டு பிரிவு செயலாளர்  அமர் பிரசாத் ரெட்டி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு அதிமுக இப்படி செய்திருக்க கூடாது என குற்றம் சாட்டியுள்ளார்.  இதனால் தற்போது  அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்குமா என்றும் கேள்வியும் எழுந்துள்ளது.

அண்ணாமலை, ஓபிஎஸ்ஸூக்கு ஆதரவு தந்தது எடப்பாடிக்கு ஈரோடு இடைத்தேர்தலுக்கு முன்பு எரிச்சலை ஏற்படுத்த, இப்போது பழி தீர்க்கும் படலம். கூட்டணி கட்சியான பாஜகவில் இருந்து அடுத்தடுத்து முக்கிய தலைகள் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். டெல்லி வரை அண்ணாமலைக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள் அதிமுக முக்கிய புள்ளிகள்.  இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது குறித்த செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  பாஜகவில் இருந்து ஆட்களை ஒவ்வொருவராக  திராவிட கட்சிகள் பிரித்து வருகின்றன. 2ம், 3ம் கட்ட  தலைவர்களை திராவிட கட்சிகள் இழுக்கின்றன. தமிழகத்தில் பாஜக  தோசை, இட்லி சுட வரவில்லை. ஜெயலலிதாவை போல் தான் நானும் முடிவுகளை அதிரடியாக எடுப்பேன் எனக் கூறியுள்ளார். திராவிட கட்சிகளின் இந்த செயல் பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது. பாஜகவில் இருந்து திராவிட காட்சிகளுக்கு செல்கின்றனர். ஆனால் விரைவில் இந்த நிலை மாறும்.  

இபிஎஸ் அண்ணாமலை

பாஜகவினரை இணைத்து கொண்டு தாங்கள் வளர்ந்து விட்டதாக காட்ட அதிமுக முயற்சித்து வருகிறது. இதற்கு முன்  திராவிட கட்சிகளைச் சார்ந்து தான் பாஜக வளர வேண்டும் எனக் கூறுவர் . தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.  

பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்து சென்றால் தான் அந்த கட்சிகள் வளரும் என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது. பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்து செல்லட்டும் எனத் தெரிவித்துள்ளார். . பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது தான். அப்போது தான் புதியவர்களுக்கு பதவி வழங்க முடியும். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web