அமெரிக்கா போரில் இறங்கினால் அனைவருக்குமே ஆபத்து... ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 13, 2025 முதல் இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தெல் அவிவ் மற்றும் ஹைஃபா உட்பட இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
இந்த மோதலில், ஈரானில் 224 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இஸ்ரேலில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா இதுவரை நேரடி இராணுவ தலையீட்டை தவிர்த்து வருகிறது. ஆனால் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் தளவாட ஆதரவு வழங்குவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா இந்த போரில் நேரடியாகவே இறங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜூன் 18ம் தேதி வெள்ளை மாளிகையில் நடந்த தேசிய பாதுகாப்பு கூட்டத்தில், ஈரானின் ஃபோர்டோ அணு ஆயுத மையத்தை 30,000 பவுண்டு ‘பங்கர்-பஸ்டர்’ குண்டுகளை பயன்படுத்தி தாக்குவது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. டிரம்ப், “நான் இதை செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம். யாருக்கும் என் முடிவு தெரியாது,” எனக் கூறியிருந்தார்.
அது மட்டுமின்றி, ரஷ்யா அதிபர் புதின் ” இஸ்ரேல் – ஈரான் இடையே நடக்கும் போரை மத்தியஸ்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்” என்பது போல தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, டிரம்ப் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தி மத்தியஸ்தம் செய்யும் பொறுப்பை நாங்கள் விரும்பவில்லை” எனவும் பேசியிருந்தார்
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமெரிக்கா இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டால் ‘அனைவருக்கும் மிகவும் ஆபத்தானது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ” ஏற்கனவே நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் அமெரிக்காவும் இந்த போரில் ஈடுபட்டது எனில் நிச்சயமாக அது அனைவருக்குமே மிகவும் ஆபத்தானதாக இருக்கும். அவர்களும் இதில் தலையிட்டால் முழு போருக்கு ஒரு முக்கிய காரணமாக மாறிவிடும்.
அவரைத் தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் எஸ்மைல் பாகேய் இது குறித்து “ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சவில்லை எனக் கூறி, ஈரான் ஒருபோதும் சரணடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே போர் காரணமாக பெரும் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் அராக்சியின் எச்சரிக்கை, அமெரிக்காவின் தலையீடு இருந்தால் என்ன ஆகும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!