“எல்லோரும் மார்ச் 31க்குள் கல்யாணம் பண்ணிக்கலைன்னா வேலையில்லை..” ஊழியர்களை மிரட்டும் தனியார் நிறுவனம்!

“எல்லோரும் இந்த மாதம் மார்ச் 31ம் தேதிக்குள் கல்யாணம் பண்ணிக்கலைன்னா வேலையில் இருந்து நீக்கப்படுவீர்கள்” என்று தங்களது நிறுவனத்தில் வேலையில்லை என்று சீனாவில் உள்ள ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
‘இந்த மார்ச் மாத இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் இந்த நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு வெளியேற்றப்படுவீர்கள்’ என்று தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அறிவிப்பு கொடுத்து அதிர்ச்சியளித்திருக்கிறது அந்நிறுவனம்.
மார்ச் மாதத்துக்குப் பிறகு திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்தால் தங்களைப் பற்றி சுய விமர்சனக் கடிதம் ஒன்றையும் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் இந்த அறிவிப்பிற்கு ஊழியர்களிடம் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் ஆட்சேபனை எழுந்ததால் இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீனாவில் தற்போது கடுமையான விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், சீனாவின் மக்கள் தொகையும் கணிசமாக குறைந்து வருகிறது. அந்நாட்டு அரசாங்கமும் இது குறித்து கவலை தெரிவித்துள்ளது.
சீனாவில் இன்றைய தலைமுறை இளைஞர்கள், பெண்களும் கூட திருமணம் செய்துக் கொள்வதை தவிர்த்து வருகிறார்கள்.
இதனால் சில நிறுவனங்கள் திருமணமாகாமல் இருக்கும் தங்களது ஊழியர்களை திருமணம் செய்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?