பவன் கல்யாண் மன்னிப்பு கேட்கலைன்னா படங்களுக்கு தடை?! - தெலுங்கானா மந்திரி எச்சரிக்கை!

 
பவன் கல்யாண்

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண், அண்மையில் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்காகத் தெலுங்கானா மாநில மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று, தெலுங்கானா மந்திரி வெங்கடரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். மன்னிப்பு கேட்காவிட்டால், தெலுங்கானாவில் பவன் கல்யாண் நடித்த திரைப்படங்கள் திரையிடப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், தெலுங்கானா மக்களைக் குறிப்பிட்டுச் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். ஆந்திராவின் கோணசீமா பகுதியில் தென்னை மரங்கள் பட்டுப் போனதற்குக் காரணம், தெலுங்கானா மக்களின் கண்திருஷ்டிதான் என்று அவர் கூறினார்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா உறுதி!..

மேலும் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிந்ததற்குக்கூட, கோணசீமா பகுதி பச்சைப் பசேல் என்று வளம் கொழித்ததுதான் காரணம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

பவன் கல்யாணின் இந்தப் பேச்சு, தெலுங்கானா மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பவன் கல்யாணின் இந்தப் பேச்சுக்குத் தெலுங்கானா மந்திரிகள் அடுத்தடுத்துக் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அம்மாநில மந்திரி வெங்கடரெட்டி தற்போது இறுக்கமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பவன் கல்யாண்

"தெலுங்கானா மக்களிடம் பவன் கல்யாண் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு தெரிவிக்கத் தவறினால், தெலுங்கானாவில் பவன் கல்யாண் நடித்த ஒரு படத்தைக்கூட திரையிட விடமாட்டோம்" என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தெலுங்கானா மற்றும் ஆந்திர அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!