உடனே முடிங்க... இன்னும் 5 நாள் தான் இருக்கு... அரிசி அட்டைதாரர்கள் இதை செய்யலன்னா ரேஷன்கார்டுகள் ரத்து!

இந்தியா முழுவதும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கார்டுகள் மூலம் விநியோகக் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் ஒரு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டுகளில் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில் மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்காவிடில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும். தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை 72 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்தே இகேஒய்சி சரிபார்ப்பை முடிப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
மாநிலத்தின் உணவுத்துறை அல்லது ரேஷன் கார்டு சேவையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குள் செல்ல வேண்டும். அதில் இகேஒய்சி இணைப்பில் ரேஷன் கார்டில் உள்ள பதிவு எண் மற்றும் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். பதிவு செய்திருந்த மொபைல் நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும் நிலையில் அதனை பதிவிட வேண்டும்.
பின்னர் ஆதார் நம்பரை பதிவிட்டு ரேஷன் கார்டுடன் இணைத்துவிட்டு ஆதார் மற்றும் ரேஷன் இரண்டிலும் உங்கள் பெயர் உட்பட பிற விவரங்கள் சரியான முறையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.அதனை ஆதாருடன் இணைத்த பிறகு கைரேகை அல்லது ஓடிபி விவரங்களை சரிபார்க்க வேண்டியது அவசியமாகிறது. இகேஒய்சி சரிபார்ப்பு முடிந்து விடும். ஒருவேளை இது செய்ய முடியாவிடில் அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது ரேஷன் கடைகளிலும் இதனை செய்து முடிக்கலாம். இதனை செய்யாவிடில் ரேஷன் கார்டுகள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதோடு அது ரத்தாகவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!