சீமானை கைது செய்யலைன்னா போராட்டம் நடத்துவோம்... கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

கள் இறக்கிய சீமான் மற்றும் அவருடன் பங்கேற்றவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்றையில் அளித்த பேட்டி: கடந்த 15ம் தேதி, துாத்துக்குடி மாவட்டம், பெரியதாழையில், கள் இறக்கிய சீமான் மற்றும் அதில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சீமானை கைது செய்ய வேண்டும். இல்லையெனில், இது சமூகத்தில் போக்கிரித்தனத்தையும், பொல்லாத விஷயங்களையும் ஊக்கப்படுத்துவதாக அமைந்து விடும்.
தமிழ்த்தேசியம் பேசிவிட்டு, கள் தேசியத்தையும், சாராய தேசியத்தையும் உருவாக்க சீமான் முயல்கிறார். இனி தமிழகத்தில் எந்த இடத்திலாவது சீமான் கள் இறக்கினால், கள் பானைகளை உடைக்க, 100 அரிவாளோடு சிலர் தயாராக இருக்கின்றனர். கள் இறக்குவோருக்கு பாதுகாப்பு கொடுக்க, அரிவாளை ஊருக்குள் துாக்கினால், கள் பானைகளை உடைக்க, 100 அரிவாளை ஊருக்குள் துாக்கினால் நிலை என்னவாகும்.
சீமான் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் அல்லது திருத்தப்படுவார். கள் இறக்கிய சீமான் மற்றும் அவருடன் பங்கேற்றவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; இல்லையென்றால், நாங்கள் அடுத்தகட்டம் நோக்கி செல்வோம். போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும். சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!